இவரது மனைவி ஷீனா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகப் பணியாற்றியவர் ஆவார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணமாகி இந்த தம்பதியர்க்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில், 29 ஆண்டுகளுக்குப் பின், சுக்கூர் தன் மனைவியை நேற்று சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் 2-வது முறையாகத் திருமணம் செய்துகொண்டார்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண நிகழ்ச்சியின்போது, அவர்களின் 3 மகள்கள் சாட்சியாகப் பங்கேற்றனர். இவர்கள் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள மாநில சன்னி பிரிவு கல்வி மையம் இவர்களின் திருமணத்திற்கு கண்டனம் தெரிவித்து, முஸ்லிம் தனி நபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.