பாலியல் தொல்லையால் அவஸ்தைபட்ட பெண் மருத்துவர்: டெல்லியில் அதிர்ச்சி

வியாழன், 7 பிப்ரவரி 2019 (14:46 IST)
டெல்லியில் பெண் மருத்துவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
 
பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக இருக்கிறது.
 
டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் பூனம் வோரா என்ற மருத்துவர் வேலை புரிந்து வந்தார். அவருக்கு அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 3 மருத்துவர்கள் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர். இதனை பூனம் மேலிடத்தில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
 
இதனால் மனமுடைந்த பூனம், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூனம் இறப்பதற்கு முன்னர் தன் தற்கொலைக்கு காரணமானவர்களின் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.
 
அந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீஸார் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்