தோனி ரன் அவுட் அதிர்ச்சியில் மரணம் அடைந்த ரசிகர்!

வெள்ளி, 12 ஜூலை 2019 (08:15 IST)
கடந்த 11, 12 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து நாடு திரும்பிவிட்ட போதிலும் இந்த தோல்வியை இன்னும் சில ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தோனி எப்படியும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார் என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அவருடைய ரன் அவுட் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அவருக்கு அவுட் கொடுத்த அம்பயரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மைதி என்பவர் தோனியின் தீவிர ரசிகர். தோனி விளையாடும் அனைத்து போட்டியையும் பார்த்து ரசிக்கும் வழக்கம் உடையவர்
 
அதேபோல் அரையிறுதி போட்டியை தமது செல்போனில் ஸ்ரீகாந்த் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது, தோனி ரன் அவுட் ஆனதும் அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளதாகவும் தெரிகிறது. மயக்கம் அடைந்த ஸ்ரீகாந்தை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்