ஜொமைட்டோ ஊழியர் மீது குற்றஞ்சாட்டிய பெண் மீது வழக்குப்பதிவு!

திங்கள், 15 மார்ச் 2021 (22:28 IST)
ஜொமைட்டோ ஊழியர் மீது குற்றம் சாட்டிய பெண் மீது போலீசார் வழக்கு தொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஜொமைட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாக வீடியோ ஒன்றை இளம்பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
ஆனால் இது குறித்த விசாரணையின் போது அந்த பெண் தான் ஜொமைட்டோ ஊழியரை தாக்கி உள்ளதாகவும் அவர் தடுக்க முயற்சித்த போது பெண்ணின் மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது 
 
இதனை அடுத்து அந்த பெண்ணை நடிகர்-நடிகைகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் ஜொமைட்டோ ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஊழியரை அந்த பெண்ணே தாக்கி விட்டு நாடகம் ஆடியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்