போக்குவரத்து போலீஸார் விதிமுறை மீறிய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். குடித்து விட்டு வாகனம் ஒட்டியது, அதிவேகம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தல் உட்பட பல குற்றங்களின் கீழ் ஒரே நாளில் 9300 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து போலீஸ் தரப்பு கூறியதாவது, வாகனச்சோதனையில் குடித்து விட்டு வண்டி ஒட்டிய 1918 மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதில் 608 பேர் நகரின் தெற்குப்பகுதிகளை சேர்ந்தவர்களாவர். 4634 பேர் ஹெல்மேட் அணியாமல் சென்றதாலும், 1164 பேர் இரு சக்கர வாகனத்தில் மூன்று நபர்களாய் பயணித்ததாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் 1589 பேர் மீது மற்ற குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.