இந்தியாவில் 90 புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ்கள்: மத்திய அரசு தகவல்

சனி, 11 பிப்ரவரி 2023 (13:20 IST)
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் 90 வகை புது வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் இந்தியாவில் உருமாறிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 90 புதிய வகையை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இதன் காரணமாக சீனா சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒமைக்ரான் மற்றும் பிற புதிய வகை உருமாறிய வைரஸ்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் குறிப்பாக எக்ஸ்.பி.பி, பி.க்யூ ஆகிய வைரஸ்கள் நாட்டில் பரவலாக மேலோங்கி காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்