நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

Senthil Velan

வியாழன், 16 மே 2024 (17:11 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
மகாராஷ்டிரா மாநிலம்  நாந்தேட் மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பண்டாரி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் மற்றும் ஆதிநாத் அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை நடத்தினர்.

ALSO READ: நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!
 
இந்த சோதனை சுமார் 72 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. சோதனையின் முடிவில்  ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்