70 சதவீத லாரி ஓட்டுனர்களுக்கு கண் பார்வை குறைவு - அதிர்ச்சி தகவல்

வியாழன், 12 அக்டோபர் 2017 (16:26 IST)
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி ஓட்டுனர்களில் பெரும்பாலானோருக்கு கண் பார்வை சரியாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்தியாவில் லாரிகளால் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. பல மனித உயிர்களும் பலியாகின்றன. இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குருகிராமில் உள்ள கெர்க்கி தௌளா நெடுஞ்சாலை சுங்கக் கட்டண மையத்தில் லாரி ஓட்டுனர்களுக்கான கண் பார்வை சோதனை முகாமை நடத்தியது. 
 
அப்போது 70 சதவீத லாரி ஓட்டுனர்களுக்கு கண் பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 700 ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்களுக்கு நடத்திய சோதனையில் 500 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 பேருக்கு 20 அடி முதல் 30 அடி தூரம் வரை கூட தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
எனவே, வருடத்திற்கு ஒருமுறை லாரி ஓட்டுனர்கள் தங்களது கண்பார்வைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் 400 சாலை விபத்துகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்