இந்த நிலையில் இன்று அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளதாகவும், இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் ஜம்முகாஷ்மீர் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய 2 பட்டாலியன்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.