தேசிய விருது விழாவை புறக்கணித்த 69 பேர் - ஏன் தெரியுமா?

வியாழன், 3 மே 2018 (14:30 IST)
தேசிய விருதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடமிருந்து பெற எதிர்ப்பு தெரிவித்து 69 கலைஞர்கள் விழாவை புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் 65வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் டூ லெட், பாகுபலி, மலையாள நடிகை பார்வதி, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. 
 
பொதுவாக தேசிய விருதை ஜனாதிபதிதான் கொடுப்பார். ஆனால், இந்த முறை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே கொடுப்பார். மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இராணி அளிப்பார் என அறிவிக்கப்பட்டது.
 
இதனால், கோபமடைந்த இயக்குனர் செழியன், நடிகை பார்வதி, பாகுபலி பட தயாரிப்பாளர் பிரசாத் உள்ளிட்ட 69 பேர் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் விருதை கொடுக்க முடியாது எனில் அது தங்களுக்கு வேண்டாம் எனக் கூறிய அவர்கள், விழாவை புறக்கணிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பிவிட்டனர்.
 
இந்த விவகாரம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்