கொரோனா மரணங்களை மறைக்கும் உத்தராகண்ட் மருத்துவமனைகள்

செவ்வாய், 18 மே 2021 (10:00 IST)
கொரோனா வைரஸால் நிகழும் மரணங்களை, உத்தராகண்ட்டில் பல மருத்துவமனைகள் மறைப்பதாக புகார் எழுந்துள்ளன. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,78,719 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,15,96,512 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 33,53,765 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 18,44,53,149 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், கொரோனா வைரஸால் நிகழும் மரணங்களை, உத்தராகண்ட்டில் பல மருத்துவமனைகள் மறைப்பதாக புகார் எழுந்துள்ளன. ஆம், கடந்த ஏப்ரல் 25 முதல் மே 12 வரையிலான காலத்தில் ஏறத்தாழ 65 பேர் கொரோனாவால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தரவுகள், அவர்கள் தகவல் தெரிவிக்கவேண்டிய டேராடூன் கொரோனா கட்டுப்பாடு மையத்துக்கு தெரிவிக்கப்படாமல் இருந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்