இந்த அறையில் நடந்த திடீர் சோதனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்தநிலையில், அந்த பெட்டகத்தில் மீண்டும் சோதனை நடத்தியபோது சுமார் 59 கிலோ எடையுள்ள தங்கம் மீண்டும் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து டெல்லி விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.