இலவசம்: 10 மொழிகளில் 500 படிப்புகள் - ஸ்மிருதி ராணி தகவல்

செவ்வாய், 10 மே 2016 (05:40 IST)
தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
 

 
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறுகையில், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பொது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற  பாட திடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும், தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இந்த பாடங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த பாடங்களை அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்படும் என்றார்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்