தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5 பேருந்து நிலையங்கள்

வியாழன், 6 அக்டோபர் 2016 (12:01 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலை குறைக்க 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
தீபாவளி பண்டிகையின்போது சென்னை மாநகரில் கூட்ட நெரிசலைக் குறைத்து பயணிகள் கஷ்டப்படாமல் எளிதாக அவர்கள் ஊர்களுக்குச் செல்ல 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு அக்டோபர் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
அண்ணாநகர் மேற்கு மாநகரப் போக்குவரத்துக்கழக பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்துநிலையம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்