திருப்பதி உண்டியலில் கொட்டிக் கிடக்கும் 35,000 கிலோ வெளிநாட்டு நாணயங்கள்

வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:28 IST)
திருப்பதி கோயில் உண்டியலில் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் உண்டியலில் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல், வெளிநாட்டில் இருந்து வருகை தரும் பக்தர்களும் தங்கள் நாட்டைச் சேர்ந்த நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
 
இதனால், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரம் கிலோ நாணயங்கள் திருப்பதி உண்டியலில் தற்போது சேர்ந்துள்ளன.
 
இவற்றை, ரிசர்வ் வங்கியின் ஆலோசனை பேரில், இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்