திருமலை ஏழுமலையான் கோயில் ஏழுமலையானை தரிசித்து திரும்பும்போது பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்துகின்றனர்.
அதன்படி, வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.14 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.