மீன் சாப்பாட்டை சாப்பிட்ட அமைச்சர் குறிப்பிட்ட சில மீனை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கிவிட்டார். இவ்வளவு டேஸ்டாக சமைத்த ஹோட்டலின் செஃப்ஃபை அழைத்து, இதுநாள் வரை இந்த மாதிரி ருசியான மீன் உணவை சாப்பிட்டதில்லை என பாராட்டினார். தன் தட்டில் இருந்த உணவை எடுத்து செஃப்ஃபிற்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவருக்கு 25,000 டிப்ஸ் கொடுத்து அவரை பாராட்டினார். மேலும் அந்த செஃப் ஹஜ்பயணம் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.