21 பேருக்கு வீரதீரச் செயலுக்கான விருது

திங்கள், 18 ஜனவரி 2010 (19:00 IST)
நாடு முழுவதும் பல்வேறு வீரதீரச் செயல் புரிந்தோருக்கான விருது இந்த ஆண்டு 21 பேருக்கு வழங்கப்படுகிறது.

இவர்களில் பலர் தங்கள் உயிரை பணயம் வைத்தாவது, பல உயிர்களைக் காப்பாற்றியவர்களும், நிலச்சரிவு மற்றும் பேரிடரில் இருந்து பலரைக் காப்பாற்றியவர்களும் அடங்கும்.

இந்திய குழந்தைகள் மேம்பாட்டுக் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியல், இன்று புதுடெல்லியில் வெளியிடப்பட்டது. விருது பெறுவோரில் 8 பேர் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நைனா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, அந்த சரிவில் இருந்து 60இக்கும் மேற்பட்ட உயிரைக் காப்பாற்றிய 13 வயதான கவுரவ் சிங் சைனியும் இந்த விருது பெறுபவர்களில் அடங்குவார்.

மற்றவர்களைக் காப்பாற்றிய அதே நேரத்தில் தனது சகோதரியையும், உறவினர் ஒருவரையும் சைனி இழந்து விட்டார்.

சைனி உட்பட பல்வேறு வீரதீர செயல்களைப் புரிந்த மொத்தம் 21 பேருக்கு விருது வழங்கப்படுவதோடு, குடியரசு தின விழா அணிவகுப்பின் போது, அவர்கள் யானை மீது பவனி வரச் செய்யப்படுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்