எனவே வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தபடி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாம் முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன், டெல்லி மணீஷ் சிசோடியா உள்பட 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், பேபி மப்ளர் மேனுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன். டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் என தெரிவித்தார்.டெல்லியின் மகன் முதல்வராகப் பதவியேற்றுள்ளதால் மக்கள் பயப்படத்தேவையில்லை. கட்சி, மதம், சாதி பேதமின்றி 5 ஆண்டுகளுக்கும் அனைவருக்காகவும் பாடுபடுவேன் . டெல்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.