ரயில்வே துறையில் 2,74,000 காலி பணியிடங்கள்! – ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

வியாழன், 29 ஜூன் 2023 (08:24 IST)
சமீபத்தில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒடிசாவில் பயணிகள் ரயில்கள் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதில் ரயில்வேதுறையில் போதுமான அளவு பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில் இந்திய ரயில்வே துறையில் மொத்தம் 2.74 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான பணியிடங்களில் மட்டும் 1.70 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பலரும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்