19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!

செவ்வாய், 12 மார்ச் 2013 (14:02 IST)
FILE
போலி ஆவணங்களுக்கு சிம்கார்டுகள் வழங்கிய தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை ரூ.2,800 கோடி அபராதம் விதித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இந்த செல்பேசி விவகாரம். இதில் 19 லட்சம் சிம் கார்டுகள் போலி ஆவணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் தொலைத் தொடர்புத் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் போலி ஆவணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்து வருகிறது. மேலும் இதற்கான அபராதத்தை எதிர்பார்த்து ரூ.400 கோடி டெபாசிட் தொகையையும் வைத்துள்ளது இந்த நிறுவனங்கள்.

பல போலி ஆவணங்களின் பேரில் வழங்கப்பட்ட சிம் கார்டுகளால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதை டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியபிறகு மத்திய அரசு இந்த கடும் அபராதத்தை விதித்துள்ளது.

முதலில் தொலைத் தொடர்புத் துறையும் நிறுவனங்களும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு உள்துறை செயலர் பெயரிலும் உளவுத்துறை இயக்குனர் ஒருவர் பெயரிலும் ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்பட்ட இரண்டு சிம் கார்டுகள் பற்றி டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதில் ஒன்று போஸ்ட் பெய்ட், மற்றொன்று ப்ரீ-பெய்ட் சேவை. இந்த இரண்டு சேவைகளையும் யார் என்ன என்று சரிபார்க்காமலேயே சேவை அளித்துள்ளது தொலைத் தொடர்பு நிறுவனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்