பசுவின் கோமியத்தில் மனிதர்களை பாதிக்கும் கிருமிகள்.. கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை..!

செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (11:11 IST)
பசுவின் கோமியத்தில் மனிதர்களை தாக்கும் கிருமிகள் அதிகம் இருப்பதாகவும் அதை குடித்தால் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
பசுவின் கோமியம் புனிதமானது என்று கூறி மனிதர்கள் வீடுகளில் தெளிப்பது மற்றும் ஒரு சிலர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுகுறித்து பல்வேறு கட்டுக்கதைகளும் கூறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பசுவின் கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளது.
 
பசு மற்றும் எருமையின் கோமியத்தில் மனிதர்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன என்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்