வயதானால் என்ன? அவளும் பெண்தான்: வெறியர்களின் வெறியாட்டம்

செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (10:28 IST)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
 

 

 
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தாபு கலான் கிராமத்தில் 100 வயது மூதாட்டியின் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ஏரியில் பிணமான மீட்கப்பட்டார்.
 
 
உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி இறந்ததற்கு முந்தைய நாள் இரவு வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
 
மேலும் அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்