இமாச்சல பிரதேசத்தில் 100% முதல் டோஸ்

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:02 IST)
இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு கூறுகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,27,37,939 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் 18 வயதை கடந்து அனைவருக்கும் முதல் வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாகயுள்ளது என்று அந்த மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைஜால் தெரிவித்துள்ளார் என ஏ.என் .ஐ செய்தி முகமை கூறுகிறது.
 
நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மாநிலத்தில் 18 வயதை கடந்த அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்