இந்த சட்டத்தின்படி நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவு தேர்வுகளில் முறைகேடுகள் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது குழுவுடன் சேர்ந்து தேர்வு நடத்தும் அதிகாரிகள், நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை செய்தால் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.