விமானத்தில் வந்த அனகொண்டா பாம்புகள்! – பெங்களூர் விமான நிலையத்தில் அதிர்ச்சி!

Prasanth Karthick

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:23 IST)
தாய்லாந்திலிருந்து பெங்களூர் வந்த விமானத்தில் அனகொண்டா பாம்புகள் கொண்டு வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பாம்பு வகைகளிலேயே மிக நீளமாக வளரக்கூடியவை மலைப்பாம்புகள். அவற்றில் உலகிலேயே அதிக நீளம் வளரக்கூடியவையாக அனகொண்டா இன பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பாம்புகள் பிரேசில், பராகுவே, உருகுவே உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் அமேசான் மழைக்காடுகளில் அதிகம் வாழ்கின்றன. இந்த அரியவகை பாம்புகளை பிடிப்பதும், விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: பட்டாக்கத்தியுடன் நுழைந்த கும்பல்.. ஒருவர் கொலை! – மதுரை சித்திரை திருவிழாவில் அதிர்ச்சி!

இந்நிலையில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து பெங்களூர் விமான நிலையம் வந்த விமானம் ஒன்றில் பயணித்த நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துக் கொண்டுள்ளார். அவரை பிடித்த பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் அவரது பையை துழாவியபோது அதற்குள் 10 மஞ்சள் நிற அனகொண்டா பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வளரும் நிலையில் உள்ள அந்த குட்டிப் பாம்புகளை அவர்கள் பத்திரமாக பிடித்து கொண்டு சென்றதுடன், அனகொண்டாவை கடத்தி வந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

வன உயிரினங்களை பிடிப்பதும், விற்பதும் இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும்போதிலும் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்