2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் கேரளா

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (21:26 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் இருந்தாலும் கேரள அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து அதன் பின்னர் ஒரு சிலர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். 
 
கடந்த மாதம் வரை தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி இன்று ஒரே நாளில் கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஒரு நாள் கொரோனா பாதிப்பு கேரளாவில் 2000ஐ நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கைன் 47,898 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் மொத்தம் 175 பாலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தகவல்களை கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்