'2ஜி: தொலைபேசி நிறுவனங்களுக்கு இடையே போர்'

புதன், 2 மார்ச் 2011 (19:55 IST)
தொலைபேசி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், தொலைபேசி சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

சில நிறுவனங்கள் 2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் அரசின் கொள்கையை ஆதரிக்கின்றன. சில நிறுவனங்கள் எதிர்க்கின்றன.

எனவே இவ்விடயத்தில் தொலைபேசி நிறுவனங்களின் நிலை என்ன என்று கேட்டபிறகு அரசுக்கு வாதம் செய்வது நல்லதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவ்வழக்கில் முக்கியமான விடயம் அரசின் கொள்கை தொடர்பானது என்பதால், அரசு முதலில் தனது நிலையை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்