நாட்டின் 16 வது மக்களவைக்கு 9 கட்டங்களாக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 8,251 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அரைமணி நேரத்துக்குப் பின்னர் மின்னணு ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.