வாரணாசி, வதோதராவில் நரேந்திர மோடி முன்னணியில் இருக்கிறார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதராவிலும், உ.பி. மாநிலம் வாரணாசியிலும் போட்டியிட்டார்.
பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்டார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் சிங்கைவிட 3,552 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.