சீமாந்திராவில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா முன்னிலையில் உள்ளார்.
சீமாந்திராவில் உள்ள நகரி தொகுதியில் ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் மந்திரி முத்துகிருஷ்ணம்ம நாயுடு போட்டியிட்டார்.
இன்று காலை தபால் ஒட்டுக்கள் எண்ணப்பட்டதில் நடிகை ரோஜா 475 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
இதே போல் இந்துபுரம் தொகுதியில் தெலுங்குதேசம் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1400 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.