ராஜ் தாக்கரே-க்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் அழைப்பாணை

திங்கள், 3 நவம்பர் 2008 (23:31 IST)
மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பின தலைவர் ராஜ் தாக்கரே தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் நீதிமன்றம், ராஜ் தாக்கரே-க்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) கார்வா நகர தலைவர் அகில் சிங் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வி.கே. மிஸ்ரா இந்த சம்மனை அனுப்ப உத்தரவிட்டார்.

என்றாலும் ராஜ் தாக்கரே எந்த தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற காலக்கெடு எதையும் நீதிபதி விதிக்கவில்லை.

மத நம்பிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மலிவான செயல்களில் ராஜ் தாக்கரே ஈடுபடுவதாகவும், பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் ராஜ் தாக்கரே-க்கு எதிராக அகில் சிங் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜார்க்கண்ட் நீதிமன்றத்தால் ஏற்கனவே ராஜ் தாக்கரே கைது உத்தரவு பெற்று வழக்கை எதிர்கொண்டு வருகிறார். ஜார்க்கண்டில் மட்டும் ராஜ் தாக்கரே மீது 6 வழக்குகள் உள்ளன.

ஜார்க்கண்டில் உள்ள வழக்கை மும்பைக்கு மாற்றுமாறு கோரி ராஜ் தாக்கரே தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 14ஆம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்