மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

புதன், 12 ஆகஸ்ட் 2009 (11:17 IST)
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அந்தமான் நிகோபர் தீவுப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தமிழகத் தலைநகர் சென்னையில் உணரப்பட்ட நிலையில், இன்று மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்