போதை பொருள் கடத்தல் தெலுங்கு நடிகர் கைது

செவ்வாய், 25 மார்ச் 2014 (17:42 IST)
போதை பொருள் கடத்தலில் தெலுங்கு நடிகர் நந்தூரி உதய்கிரண் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு போதை பொருளை சப்ளை செய்த நைஜீரிய இளைஞனும் பிடிபட்டார்.
FILE

தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்கள் பலர் போதை பொருள் கடத்தலில் கைதாவது தொடர்ந்து நடந்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜாசகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் போதை பொருள் வாங்கும்போது காவலர்களால் பிடிபட்டனர்.சினிமா துறையை சேர்ந்த மேலும் பலருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்துவந்தது.

இதில் நந்தூரி உதய்கிரண் பிடிபட்டுள்ளார். ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது நைஜீரியா இளைஞனிடம் நடிகர் நந்தூரி உதய்கிரண் ‘கோகைன்’ போதை பொருளை வாங்கிக் கொண்டு இருந்தார். அவர்களை காவலர்கள் கைது செய்தார்கள்.

கைதான நைஜீரிய வாலிபர் பெயர் ரோடிமி ஒலுசோலா. இவர் டெல்லியில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து ஐதராபாத் நகரில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

நந்தூரி உதய்கிரண் தெலுங்கில் யுவராஜ்யம், ‘பேஸ்புக்’‘பரேரே’, ரக்சகுலு போன்ற படங் களில் நடித்துள்ளார். இருவரிடம் இருந்து 15 கிராம் போதை பொருள் மற்றும் 4ஆயிரம் ருபாப் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தலில் வேறு நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது என கூடுதல் காவலர் டி.ஜி.லிம்பா ரெட்டி தெரிவித்தார். ஹக்கீம் என்ற பிரபல போதை பொருள் கடத்தல்காரனிடம் இருந்து நைஜீரிய இளைஞன் வாங்கி ஐதராபாத்தில் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்