பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்க ஒப்புதல்

வியாழன், 12 ஜனவரி 2012 (18:53 IST)
பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை அமைக்க பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மையம் நாட்டிலுள்ள அனைத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் முகமையாக செயல்படும்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி கூட்டத்தில், சுமார் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின்னர் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பதற்கான திட்டத்தை தயாரித்து அளித்தவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.இந்த அமைப்பு சில குறைபாடுகளால் இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில்,

இந்த மையம் ஐபி, ரா,மாநில புலனாய்வு ஏஜென்சிகள் என நாட்டிலுள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும். அத்துடன் புலனாய்வு தகவல்களை ஆராய்ந்து ஒப்பிட்டுப்பார்த்து நடவடிக்கை எடுக்கத்தக்க புலனாய்வு தகவல்களாக மொழிபெயர்க்கும் பணியை மேற்கொள்ளும்.

மேலும் இந்த அமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து செயல்படும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்