திகார் சிறையிலேயே 2ஜி வழக்கு விசாரணை:ராசா, கனிமொழி அதிர்ச்சி!

செவ்வாய், 22 நவம்பர் 2011 (16:46 IST)
பாதுகாப்பு காரணங்களுக்காக 2ஜி ஊழல் வழக்கு விசாரணையை திகார் சிறை வளாகத்திற்கு மாற்ற டெல்லி சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகள் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது மேற்கூறிய முக்கிய புள்ளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 2ஜி வழக்கு விசாரணையை திகார் சிறை வளாகத்திற்குள்ளாகவே நடத்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.

நீதிமன்றத்தின் இந்த முடிவு ராசா,கனிமொழி உள்ளிட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெறும்பொழுதாவது வேனில் அழைத்து வரும்போது சிறிது நேரத்திற்காவது வெளியுலகை பார்க்க முடியும்.ஆனால் திகார் சிறை வளாகத்திற்குள்ளாகவே நீதிமன்றத்தை அமைத்து வழக்கு விசாரணையை நடத்தினால் அதற்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு ராசா உள்ளிட்ட 2ஜி வழக்கு குற்றவாளிகள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்