செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது

ஞாயிறு, 3 நவம்பர் 2013 (15:53 IST)
FILE
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5-ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அவற்றில் முதல் ஏவுதளத்தில் இருந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்துக்கு ஏவப்படுகிறது. விண்கல் ஏவுவதற்கான கவுண்டன் தொடங்கியுள்ளது. இன்று காலை 6:08 மணிக்கு கவுண்டன் தொடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்