சென்னை-மதுரை உட்பட 57 புதிய ரயில்கள்

வெள்ளி, 3 ஜூலை 2009 (16:42 IST)
மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் உட்பட மொத்தம் 57 புதிய ரயில்கள் ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2009-10ஆம் நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இத்தகவலைத் தெரிவித்தார்.

புதிய ரயில்களில் 20 தினசரி ரயில்கள், வாரம் இருமுறை இயக்கப்படும் 6 ரயில்கள், வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் 5 ரயில்கள், 12 வாராந்திர ரயில்கள், வாரத்திற்கு 5 நாட்களும், 6 நாட்களும் இயக்கப்படும் தலா 2 ரயில்களும் அடங்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மும்பை - வாரணாசி சூப்பர்பாஸ்ட், ஆக்ரா - லக்னோ இன்டர்சிட்டி, கோரபுட்-ரூர்கேலா எக்ஸ்பிரஸ், ஆக்ரா - அஜ்மீர் இன்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட், கோரபுட் - மும்பை சூப்பர்பாஸ்ட், வாரணாசி-ஜம்மு சூப்பர்பாஸ்ட், ராஞ்சி-பாட்னா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை உட்பட 20 ரயில்கள் தினசரி இயக்கப்படும்.

மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-செகந்திராபாத்-மும்பை சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட வாரம் இருமுறை ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மம்தா பானர்ஜி தனது அறிக்கையில் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்