சிரஞ்சீவியை முதல்வராக்க காங்கிரஸ் தலைமை திட்டம்!

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (09:39 IST)
FILE
ஆந்திரா பிரிவினை விவகாரத்தில் அதிருப்தியுற்ற முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஒத்துவரவில்லையெனில் நடிகர் சிரஞ்சீவியை முதல்வராக்க காங்கிரஸ் தலைமை, அதாவது சோனியா திட்டமிட்டிருப்பதாக ஆந்திர செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெகன்மோகன் ரெட்டி, சந்திர பாபுநாயுடு இருவரையும் வீழ்த்த சிரஞ்சீவிதான் சரியான நபர் என்பதால் அவரை முன் நிறுத்துகிறார் சோனியா. ஆந்திரா பிரிவினையை தடுக்க முதல்வர் கிரண்குமார் ரெட்டி பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தெலுங்கானாவை சோனியா காந்தி உருவாக்கியுள்ளார்.

மத்திய அரசின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவி விலக திட்டமிட்டார். கடந்த வாரமே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததன் பேரில் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் தெலன்ங்கானா...

அல்லாத பகுதியில் சிரஞ்சீவி சார்ந்த காபு சாதியை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் இதன் மூலம் சிரஞ்சீவியை முதல்வராக்கினால் அந்த வாக்குகள் தங்களுக்கே வந்தடையும் என்று சாதி அரசியல் செய்யத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்.

தெலங்கானா அல்லாத பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவிக்கு ஏற்கனவே ஆந்திராவை 2ஆக பிரிப்பது தெரிந்துள்ளது. இதனால்தான் தன் மகன் பட ரிலீஸை தள்ளிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது தெலங்கானா அல்லாத பகுதியைச் சேர்ந்த மற்ற காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயாராகிவிட்ட நிலையில் சிரஞ்சீவி மட்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்ற தகவல்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் நாற்காலிக்கு சிரஞ்சீவி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டுள்ளார் என்றே ஆந்திர வட்டாரங்கள் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்