கோவாவில் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. அங்கு பெட்ரோல் விலைக்கான வரி குறைக்கப்பட்டதையடுத்து விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரியை 20 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாகக் குறைத்தது. இதன் மூலம் கோவா மாநிலத்தில் ரூ. 66 ஆக இருந்த பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 குறைந்து ரூ. 55 ஆக உள்ளது.
இதனால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றனர்.தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ 2.3 கோடிக்கு பெட்ரோல் விற்பனையாகும் பெட்ரோல் தற்போது ரூ 3.5 கோடிக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் கடந்த இருநாட்களில் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் ஒரே மாநிலம் கோவா தான்.
News Summary : Petrol sales increased after reduction in VAT , in Goa. Various petrol pumps have registered almost two-fold increase in sales in the last two days.