குஜராத் கலவரம்: நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

புதன், 1 பிப்ரவரி 2012 (15:24 IST)
நானாவதி கமிஷன் முன்பு நரேந்திர மோடி ஆஜராக உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2002 ல் ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்க நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் முன்பு நரேந்திர மோடி நேரில் ஆஜராகி குறுக்கு விசாரணைக்கு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஜன் சங்கார்ஷ் மஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் சோனியா கோகனி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,நானாவதி கமிஷன் முன்பு மோடி ஆஜாகத் தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்