கறுப்புப் பண வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (16:49 IST)
கறுப்புப் பண விவகாரத்தில் அதிக அதிகாரம் உடைய விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும் முடிவு தொடர்பாக நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

கறுப்புப் பண விவகாரத்தில் விசாரணையை மேற்பார்வையிட 2 ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 10 நபர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்பில் மாறுதல் கோரி மத்திய அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கபீர் மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கபீர் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றதுதான் என்றும், ஏற்றதல்ல என்று நீதிபதி நிஜ்ஜரும் தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்