கட்டாயக்கல்வி மசோதா: மக்களவையில் நிறைவேறியது

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (20:47 IST)
அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி கற்க உரிமை வழங்கும் சட்ட மசோதாவை, சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.

இதன் அடுத்தக்கட்டமாக, 18 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்