கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

திங்கள், 1 அக்டோபர் 2012 (17:52 IST)
புதுடெல்லியில் கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களுக்கு இடையிலான மகாதாயி நதிநீர் பங்கீடு வழங்குவது குறித்து கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தங்குவதற்குத் தேவையான வீட்டுவசதிகள் பெறுவதற்குத் தகுதி இல்லை என்றும் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினால் அதற்குரிய வாடகை வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உங்களை நீதிமன்றம் எதற்கு எழுப்ப வேண்டும்? எழுப்ப வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்துகிறீர்கள்? இந்தத் தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உடனே வீட்டுவசதிகளை வழங்க வேண்டும்.

இல்லையென்றால், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் டெல்லி வீதிகளில் நின்று போராட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? தீர்ப்பாயங்கள் செயல்பட நீங்கள் விரும்பவில்லை என்றால், தீர்ப்பாயங்களில் நீதிபதிகளை நியமிக்கும் சட்டத்தை உடைத்தெறியுங்கள்.

உங்களையும் இந்த நாட்டையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கூறியது

வெப்துனியாவைப் படிக்கவும்