எம்.பி.க்களுக்கு லஞ்சம்: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கெடு

வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (19:23 IST)
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையை முடிக்க டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 3 பா.ஜனதா எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான அமர்சிங்கிடம் டெல்லி காவல்துறையினர் அண்மையில் விசாரணை நடத்தியதோடு, சிலரை கைதும் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று டெல்லி காவல்துறை தாக்கல் செய்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்த புலன் விசாரணையை இன்னும் 4 வார காலத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்,எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான மூல வேரை கண்டறியுமாறும் ஆணை பிறப்பித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்