எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

திங்கள், 3 செப்டம்பர் 2012 (12:46 IST)
பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் பாரதீய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து இன்று 9 வது நாளாக பாராளுமன்றத்தின் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்