உ.பி. கோவிலில் மோடிக்கு சிலையாம்!

வியாழன், 30 ஜனவரி 2014 (15:48 IST)
பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடிக்கு, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
FILE

உத்தர பிரதேச மாநிலம், கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ளது பகவான்பூர் கிராமம். இங்குள்ள பழமையான கோவிலில் தான், மோடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மோடி அமர்ந்திருப்பது போல், நான்கடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு, மோடி போல் தாடி, உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்