பள்ளியில் தேசிய கீதம் பாட தடை: கொந்தளித்த ஆசிரியர்கள் ராஜினாமா

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (00:39 IST)
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்  மாவட்டம் சைதாபாத் என்ற இடத்தில் ஜியோ-உல்-ஹக் என்பவர் 2 பள்ளிக்  கூடங்களை நடத்தி வருகிறார்.


 


இவரது   பள்ளியில் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் சொல்லவும் சரஸ்வதி வந்தனம் பாடவும் தடை  விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் வருகிற சுதந்திர தினத்தன்று தனது பள்ளிகளில்   தேசிய கீதம் இசைக்க கூடாது என்றும் தடை விதித்தார்.  இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி  அடைந்தனர். பள்ளி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்  மற்றும் பள்ளி முதல்வர்   ஆகியோர்  பள்ளியில் இருந்து விலகினார்கள்.

இது  தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.  விசாரணையில் ஜியா-உல்-ஹக்,  2 பள்ளிகளை அரசு அனுமதி பெறாமலும், பதிவு செய்யாமலும் நடத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதை அடுத்து, அனுமதி இன்றி கல்வி நிறுவனம் நடத்தியதற்காக, பள்ளி நிர்வாகி ஜியா-உல்-ஹக்   கைது செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்