இலங்கைக்கு எதிராக இந்தியா- பின்னணியில் கூடங்குளம்

வெள்ளி, 4 மே 2012 (20:06 IST)
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது என இலங்கையில் வெளிவரும் அரசுக்கு ஆதரவான திவயின இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்தது.

முன்னதாக, இலங்கைக்கு எதிராக வாக்களித்தால்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தமிழக அரசு ஆதரவு தரும் என்று மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்தே மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தது என்று திவயின இதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதை பிபிசியின் இந்தியப் பிரிவு செய்தியாளர் நரேன் பூஷன் உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

News Summary:
According to the Divaina newspaper, India has released the reason for voting against Lankan government. Tamil Nadu Chief Minister Jayalaitha grant permission to build up Kudankulam nuclear power plant. Due to this Indian central government agreed to vote against SriLanka at the UN Human Rights Council.

வெப்துனியாவைப் படிக்கவும்