இந்திய – சீன உறவு முதிர்ச்சியடைந்துள்ளது: பிரதமர் மன்மோகன் சிங்

வியாழன், 16 டிசம்பர் 2010 (17:04 IST)
இந்தியாவுன் சீனாவும் ஒரு நாட்டின் உறவில் மற்ற நாட்டின் நலன் அடங்கியுள்ளது உணர்ந்து, தெற்காசியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டுவரும் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவை பெருமைபடுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் அவருக்கு அளித்த சிறப்பு விருந்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முதிர்ச்சியடைதுள்ளது என்று கூறியுள்ளார்.

‘ஒட்டுமொத்தமாக 250 கோடி மக்களைக் கொண்டுள்ள இரு பெரும் நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஒரு குரலில் பேசும்போது உலக நாடுகள் அதனை உற்றுக் கவனிக்கின்றன. இரு நாட்டில் முன்னேற்றத்தில் மற்றொரு நாட்டின் நலன் உள்ளது. எனவே, 21ஆவது நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் நாம் நேர்மையாக இணைந்து பணியாற்றி முன்னேற்றம் கண்டிட வேண்டும், அதுவே தெற்காசியாவின் நலனிற்கு உகந்ததாகும்” என்று மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்